சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/அரியலூரில் காமராஜர் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் – 18,161 மாணவர்கள் பயன்பெறுகின்றனர்
செய்திகள்

அரியலூரில் காமராஜர் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் – 18,161 மாணவர்கள் பயன்பெறுகின்றனர்

🕒 22 செப்., 2026, 09:46 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
அரியலூரில் காமராஜர் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் – 18,161 மாணவர்கள் பயன்பெறுகின்றனர்

AI Highlights

  • அரியலூர் மாவட்டத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான காமராஜர் காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 241 பள்ளிகளில் 18,161 மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

அரியலூர் மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, அதன் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் மூலம் மாவட்டத்தில் 241 பள்ளிகளைச் சேர்ந்த 18,161 மாணவ, மாணவிகள் பயன்பெற உள்ளனர்.

சென்னை திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம் சென்னை நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தை முதல்-அமைச்சர் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இதன் நேரலை நிகழ்ச்சி அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஒளிபரப்பப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கியதுடன், அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 519 பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 26,176 மாணவர்கள் காலை உணவுத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.

தற்போது திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரகப் பகுதிகளில் 218 அரசு பள்ளிகள், 17 அரசு உதவிபெறும் பள்ளிகள், பேரூராட்சி பகுதிகளில் 3 அரசு பள்ளிகள் மற்றும் 3 அரசு உதவிபெறும் பள்ளிகள் என மொத்தம் 241 பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 18,161 மாணவ, மாணவிகள் பயன்பெற உள்ளனர்.

இதற்காக ரூ.37 லட்சத்து 2 ஆயிரத்து 900 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கூடுதல் சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், புதிதாக திட்டம் தொடங்கப்படவுள்ள 117 பள்ளிகளுக்கு ரூ.8 லட்சத்து 57 ஆயிரத்து 25 நிதி ஒதுக்கீட்டில் எரிவாயு இணைப்புகளும் பெறப்பட்டுள்ளன.

காலை உணவுத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வெண்பொங்கல், கோதுமை ரவா கிச்சடி, ரவா உப்புமா, சேமியா கிச்சடி உள்ளிட்ட பல்வேறு உணவுகள் காய்கறி சாம்பாருடன் வழங்கப்படுகின்றன.

முன்னதாக, மாணவர்களுக்கு காலை உணவு தயாரிக்கப்படும் சமையல் கூடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காலை உணவுத்திட்டம் தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாக அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர். காலை உணவு கிடைப்பதால் பசியின்றி வகுப்புகளில் கவனம் செலுத்துவதற்கும், பள்ளி செயல்பாடுகளில் ஆர்வத்துடன் பங்கேற்பதற்கும் உதவுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சு.ராஜேந்திரன், மகளிர் திட்ட இயக்குநர் சு.தேன்ராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகோபால், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரேமி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔