*விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 3 பேரை கைது செய்த திருச்சுழி போலீசார்* விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் இருந்து கமுதி செல்லும் சாலையில் முத்துராமலிங்கபுரம் புதூர் பேருந்து நிறுத்தம் அருகே மூன்று இளைஞர்கள் கையில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் அரிவாளுடன் நின்று கொண்டு இருந்துள்ளனர். மேலும் அந்த நபர்கள் தங்கள் இருசக்கர வாகனத்தை சாலையின் குறுக்காக நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்வதாகவும் கிடைத்த தகவலின் பேரில் திருச்சுழி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த மூன்று நபர்களையும் பிடித்து திருச்சுழி காவல் நிலையம் கொண்டு வந்தனர். அவர்களிடமிருந்த மூன்று அரிவாள்கள் மற்றும் ஒரு ஆர்15 இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை செய்ததில் அந்த இளைஞர்கள் முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன்(23), பரளச்சி மேலையூரை சேர்ந்த முகேஷ் பாண்டி (23) மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா பெரிய நாயகிபுரத்தைச் சேர்ந்த ஹரிஹரன் (22)என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் அரிவாளுடன் சுற்றிய மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த திருச்சுழி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.
செய்திகள்
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களுடன் சுற்றிய 3 பேர் கைது!
The News Outlook
🕒 10 ஆக., 2026, 07:58 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

