Settings

முகப்பு/சர்வதேசம்/19 வயதில் ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டம்... யார் இந்த கஸியா லிஸ் மெஜோ?
சர்வதேசம்

19 வயதில் ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டம்... யார் இந்த கஸியா லிஸ் மெஜோ?

🕒 25 ஆக., 2026, 06:54 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
19 வயதில் ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டம்... யார் இந்த கஸியா லிஸ் மெஜோ? - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •19 வயது சட்ட மாணவியும் மாடலுமான கேரளாவைச் சேர்ந்த கஸியா லிஸ் மெஜோ மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 பட்டத்தை வென்றார். அவரது பின்னணி மற்றும் சாதனைகள் குறித்து பார்க்கலாம்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கேரளாவைச் சேர்ந்த 19 வயது சட்ட மாணவியும் மாடலுமான கஸியா லிஸ் மெஜோ, ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026’ பட்டத்தை வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற பிரமாண்ட இறுதிப்போட்டியில் 52 போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி அவர் இந்தப் பட்டத்தை வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை வென்ற முதல் கேரளப் பெண் என்ற பெருமையையும் கஸியா பெற்றுள்ளார். மாவேலிக்கரையைச் சேர்ந்த இவர், அபுதாபியில் வளர்ந்தவர். தற்போது சட்டப்படிப்பை மேற்கொண்டு வருவதுடன் மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

சட்ட மாணவி முதல் அழகிப் போட்டி வரை

கஸியாவுக்கு அழகிப் போட்டி உலகம் புதிதல்ல. 2024-ம் ஆண்டு மிஸ் டீன் திவா பட்டத்தை வென்ற அவர், 2025-ம் ஆண்டு ‘மிஸ் டீன் இன்டர்நேஷனல்’ போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று முதல் ரன்னர்-அப் இடத்தைப் பிடித்தார். 2026-ம் ஆண்டு ‘மிஸ் யுனிவர்ஸ் கேரளா’ பட்டத்தையும் வென்றிருந்தார்.

மாடலிங் மட்டுமின்றி கஸியா பாரம்பரிய நடனத்திலும் ஆர்வம் கொண்டவர். மேலும், மலையாளத் திரைப்படமான ‘ஷைலாக்’ மூலம் நடிப்புத் துறையிலும் அறிமுகமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 பட்டத்தை வென்றுள்ள கஸியா, வரும் நவம்பர் மாதம் போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற உள்ள 75-வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார்.

இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வைஷ்ணவி கணேஷ் முதல் ரன்னர்-அப் ஆகவும், குஜராத்தைச் சேர்ந்த அனுஷ்ரீ சத்வலேகர் இரண்டாவது ரன்னர்-அப் ஆகவும் தேர்வு செய்யப்பட்டனர். 

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
BRICS மாநாடு: 400 பேர் கொண்ட குழுவுடன் இந்தியா வருகிறாரா சீன அதிபர் ஜி ஜின்பிங்?சர்வதேசம்

BRICS மாநாடு: 400 பேர் கொண்ட குழுவுடன் இந்தியா வருகிறாரா சீன அதிபர் ஜி ஜின்பிங்?

Admin🕒 ஆக. 25
வானில் அரிய முழு சூரிய கிரகணம்: வியப்பில் ஆழ்ந்த உலகம்!சர்வதேசம்

வானில் அரிய முழு சூரிய கிரகணம்: வியப்பில் ஆழ்ந்த உலகம்!

Admin🕒 ஆக. 13
டிரம்ப்பின் புதிய வரி உயர்வு: 25 அமெரிக்க மாநிலங்கள் வழக்கு!சர்வதேசம்

டிரம்ப்பின் புதிய வரி உயர்வு: 25 அமெரிக்க மாநிலங்கள் வழக்கு!

Admin🕒 ஆக. 4
தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை கடத்தி பணம் பறிக்க முயற்சி: கட்டிவைத்து சித்திரவதை – 5 இந்தியர்கள் கைதுசர்வதேசம்

தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை கடத்தி பணம் பறிக்க முயற்சி: கட்டிவைத்து சித்திரவதை – 5 இந்தியர்கள் கைது

Admin🕒 ஜூலை 29
சுட்டெரித்த வெயிலுக்கு குளிர்ந்த விடை! குளித்தலையில் வெளுத்து வாங்கிய கனமழை!செய்திகள்

சுட்டெரித்த வெயிலுக்கு குளிர்ந்த விடை! குளித்தலையில் வெளுத்து வாங்கிய கனமழை!

Anandakumar🕒 நவ. 25
பக்தர்களும் மக்களும் அவதி! 3 மாதங்களாக பழுதான குடிநீர்த் தொட்டி: கண்டு கொள்ளாத நகராட்சி!நகரங்கள்

பக்தர்களும் மக்களும் அவதி! 3 மாதங்களாக பழுதான குடிநீர்த் தொட்டி: கண்டு கொள்ளாத நகராட்சி!

Manimaran🕒 நவ. 25
மழையின்றி காய்ந்த நிலக்கடலை பயிர்கள்: சொந்த செலவில் தண்ணீர் பாய்ச்சி காப்பாற்றும் விவசாயிகள்!செய்திகள்

மழையின்றி காய்ந்த நிலக்கடலை பயிர்கள்: சொந்த செலவில் தண்ணீர் பாய்ச்சி காப்பாற்றும் விவசாயிகள்!

Manimaran🕒 நவ. 25
கொட்டும் மழையில் நனைந்தபடி கூட்டுறவு கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் போராட்டம்!செய்திகள்

கொட்டும் மழையில் நனைந்தபடி கூட்டுறவு கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் போராட்டம்!

Manimaran🕒 நவ. 25
TNO வாட்ஸ்அப் சானல் ➔