விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே ராமச்சந்திராபுரம் பகுதியில் மகாலிங்கம் என்பவர் தொழுவம் அமைத்து 35க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார் .இந்த நிலையில் இன்று அதிகாலை அவரது ஆட்டு தொழுவத்திற்கு புகுந்த 3 வெறிநாய்கள் ஆட்டை கடித்து குதறியதில் 15 ஆடுகள் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும் 10 ஆடுகள் வரை காயம் அடைந்துள்ளது.ஆசை அசையாய் வளர்த்த ஆடுகள் உயிரிழந்ததை பார்த்து வேதனை அடைந்த மகாலிங்கம் 3 லட்சம் மதிப்புள்ள ஆடுகள் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் வெறிநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகள்
வெறிநாய்கள் கடித்ததில் 15 ஆடுகள் பலி: வத்திராயிருப்பு அருகே பரபரப்பு!
The News Outlook
🕒 10 ஆக., 2026, 05:08 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
