சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/செய்தித்தாள்களைத் திறந்தாலே போக்சோ செய்திகள் வருகின்றன – தேனி நீதிபதி இரஜினி
அரசியல்

செய்தித்தாள்களைத் திறந்தாலே போக்சோ செய்திகள் வருகின்றன – தேனி நீதிபதி இரஜினி

🕒 22 செப்., 2026, 04:57 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
செய்தித்தாள்களைத் திறந்தாலே போக்சோ செய்திகள் வருகின்றன – தேனி நீதிபதி இரஜினி

AI Highlights

  • தேனியில் நடைபெற்ற உலக அமைதி தின விழாவில் பேசிய நீதிபதி இரஜினி, மன அமைதி, கோபம், பொறாமை மற்றும் குற்றச் செயல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

சமூகத்தில் அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழல் நிலவ வேண்டியது அவசியம் என்றும், சிறிய தவறுகூட ஒருவரது குடும்பத்தையும், அவர் சேர்த்து வைத்த நற்பெயரையும் பாதிக்கும் நிலையை ஏற்படுத்திவிடும் என்றும் தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி இரஜினி தெரிவித்துள்ளார்.

சர்வதேச உலக அமைதி தினத்தை முன்னிட்டு தேனியில் “உலக அமைதி குழு” மற்றும் “மனிதநேய காப்பகம்” சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி இரஜினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், சமூக சேவகர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து பேசிய நீதிபதி இரஜினி, சமூக வளர்ச்சிக்கு அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழல் மிகவும் அவசியம் என்றார். தற்போதைய சூழலில் வீட்டை விட்டு வெளியே செல்வதுகூட சவாலாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்த்து, அவர்களைவிட அதிகமாக வசதி மற்றும் பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் குறுகிய மனப்பான்மைக்கு வழிவகுக்கும் என்றும், வாழ்க்கையில் சரியான முடிவுகளை எடுக்க மன அமைதி அவசியம் என்றும் அவர் கூறினார்.

மேலும், கோபம், பொறாமை மற்றும் பிறருடன் தொடர்ந்து ஒப்பிடும் மனநிலை ஆகியவை ஒருவரை தவறான முடிவுகளுக்கும், குற்றச் செயல்களுக்கும் இட்டுச் செல்லக்கூடும் என அவர் எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தற்போது செய்தித்தாள்களைப் பார்க்கும்போது போக்சோ தொடர்பான செய்திகள் அதிகமாக இடம்பெறுவதை காண முடிகிறது என்றார். ஒருவர் சமூகத்தில் எவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருந்தாலும், ஒரு சிறிய தவறான ஆசையால் சட்டத்துக்கு எதிரான செயலில் ஈடுபட்டால், அவர் இதுவரை சேர்த்து வைத்திருந்த நற்பெயர் மற்றும் குடும்பத்தின் நிம்மதி பாதிக்கப்படுவதுடன், வழக்கை எதிர்கொள்ளும் சூழலும் உருவாகும் என தெரிவித்தார்.

எனவே, ஒவ்வொருவரும் தெளிவான சிந்தனையுடன் செயல்பட்டு மன அமைதியை பேண வேண்டும். அவ்வாறு இருந்தால் உலகமே அழகானதாகவும், நமக்கு சாதகமானதாகவும் தோன்றும் என்று நீதிபதி இரஜினி அறிவுறுத்தினார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔