சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/விளையாட்டு/முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2026: இணையவழி முன்பதிவு தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் தகவல்
விளையாட்டு

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2026: இணையவழி முன்பதிவு தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

The News Outlook
🕒 8 ஆக., 2026, 04:37 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2026: இணையவழி முன்பதிவு தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

2026-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையவழிப் பதிவு 06.08.2026 முதல் தொடங்கியுள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் இப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடைபெறும் இப்போட்டிகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ளன. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 38 வகையான விளையாட்டுகளுடன், இந்த ஆண்டு வில்வித்தை, வுஷூ (Wushu), துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீட் ஸ்கேட்டிங், நீர் விளையாட்டுகளான கயாக்கிங் (Kayaking) மற்றும் கேனோயிங் (Canoeing) உள்ளிட்ட புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 45 வகையான போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

பங்கேற்பதற்கான தகுதிகள் மற்றும் வயது வரம்பு:

  • பள்ளி மாணவர்கள்: 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் 19 வயதிற்குட்பட்டோர் (01.01.2008 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்திருக்க வேண்டும்).
  • கல்லூரி மாணவர்கள்: 25 வயதிற்குட்பட்டோர் (01.07.2001 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்திருக்க வேண்டும்).
  • பொதுப் பிரிவு: 15 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் (01.01.1991 முதல் 01.01.2011-க்குள் பிறந்திருக்க வேண்டும்).
  • மாற்றுத்திறனாளிகள்: அனைத்து வயதினரும் பங்கேற்கலாம்.
  • அரசு ஊழியர்கள்: தமிழ்நாடு அரசு மற்றும் அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள், தமிழ்நாட்டில் பணியாற்றும் ஒன்றிய அரசுப் பணியாளர்கள் பங்கேற்கலாம்.

போட்டிகள் நடைபெறவுள்ள பிரிவுகள்:

1. மாவட்ட அளவிலான போட்டிகள்:

  • பள்ளிப் பிரிவு (17 விளையாட்டுகள்): தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, வளைகோல்பந்து, கபாடி, சிலம்பம், நீச்சல், மேஜைப்பந்து, கையுந்துபந்து, கைப்பந்து, கேரம், சதுரங்கம், கோ-கோ, ஸ்பீட் ஸ்கேட்டிங், யோகா.
  • கல்லூரிப் பிரிவு (17 விளையாட்டுகள்): தடகளம், இறகுப்பந்து, பூப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, வளைகோல்பந்து, கபாடி, சிலம்பம், நீச்சல், மேஜைப்பந்து, கையுந்துபந்து, கைப்பந்து, கேரம், சதுரங்கம், ஸ்பீட் ஸ்கேட்டிங், யோகா.
  • மாற்றுத்திறனாளிகள் பிரிவு:
  • உடலியக்கக் குறைபாடுடையோர் (Physically Challenged): தடகளம், இறகுப்பந்து (நின்ற நிலை), மேஜைப்பந்து (சக்கர நாற்காலி).
  • பார்வைக் குறைபாடுடையோர் (Visually Challenged): தடகளம், மாற்றிமைக்கப்பட்ட கைப்பந்து (Adapted Volleyball).
  • செவித்திறன் குறைபாடுடையோர் (Hearing Impaired): தடகளம், கபாடி.
  • மனவளர்ச்சி குன்றியோர் (PWID): தடகளம், எறிபந்து, நீச்சல்.
  • பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டோர் (Cerebral Palsy): தடகளம், கால்பந்து.
  • பொதுப் பிரிவு: தடகளம், கிரிக்கெட், கையுந்துபந்து, கால்பந்து, கேரம், சிலம்பம், யோகாசனா, இறகுப்பந்து, கபாடி.
  • அரசு ஊழியர்கள் பிரிவு: தடகளம், சதுரங்கம், கபாடி, கையுந்துபந்து, யோகாசனா, இறகுப்பந்து, கேரம்.

2. மண்டல அளவிலான போட்டிகள்:

  • பள்ளிப் பிரிவு: கடற்கரை கையுந்துபந்து, டென்னிஸ், பளுதூக்குதல், வாள்வீச்சு, ஜூடோ, குத்துச்சண்டை, சாலை சைக்கிளிங், மல்லர்கம்பம், வுஷூ, வில்வித்தை, ஜிம்னாஸ்டிக்ஸ், கயாக்கிங் மற்றும் கேனோயிங், துப்பாக்கிச் சுடுதல், ஸ்குவாஷ்.
  • கல்லூரிப் பிரிவு: கடற்கரை கையுந்துபந்து, டென்னிஸ், பளுதூக்குதல், வாள்வீச்சு, குத்துச்சண்டை, சாலை சைக்கிளிங், மல்லர்கம்பம், வில்வித்தை, ஜிம்னாஸ்டிக்ஸ், வுஷூ, கயாக்கிங் மற்றும் கேனோயிங், துப்பாக்கிச் சுடுதல், ஸ்குவாஷ்.

3. நேரடி மாநில அளவிலான போட்டிகள்:

  • மாற்றுத்திறனாளிகள் பிரிவு (பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டோர் மட்டும்): தடகளம், கால்பந்து.
  • பொதுப் பிரிவு: மின்னணு விளையாட்டுகள் (Esports).

இப்போட்டிகளில் பங்கேற்க விரும்பும் விளையாட்டு வீரர்கள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tncmtrophy.sdat.in வாயிலாகத் தங்களையோ அல்லது தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 31.08.2026 மாலை 6.00 மணி இறுதி நாள் ஆகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...