சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/ஆன்மீகம்/புரட்டாசி 2-வது சனிக்கிழமை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
ஆன்மீகம்

புரட்டாசி 2-வது சனிக்கிழமை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

🕒 28 செப்., 2026, 04:31 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
புரட்டாசி 2-வது சனிக்கிழமை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
✨

AI Highlights

  • •புரட்டாசி பிரம்மோற்சவத்தின் 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

புரட்டாசி பிரம்மோற்சவ விழாவின் 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் அமைந்துள்ள ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், “தென் திருப்பதி” என பக்தர்களால் அழைக்கப்படுகிறது. சுமார் 240 படிகளைக் கொண்ட திருவண்ணாமலை மீது நின்ற கோலத்தில் ஸ்ரீநிவாச பெருமாள் அருள்பாலிக்கிறார்.

திருப்பதியில் இருந்து ஆண்டாள்–ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண வந்த ஸ்ரீநிவாச பெருமாள் இந்த மலையிலேயே தங்கியதாக ஐதீகம் கூறப்படுவதால், இக்கோயில் தென் திருப்பதி என அழைக்கப்படுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

5 சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் 5 சனிக்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு மற்றும் கிரிவலம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு செப்டம்பர் 19, 26 மற்றும் அக்டோபர் 3, 10, 17 ஆகிய தேதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

2-வது சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீநிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

நடை திறப்பதற்கு முன்பாகவே ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட அதிகளவில் பக்தர்கள் வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கருட வாகனத்தில் எழுந்தருளும் பெருமாள்

காலை 10.30 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து புறப்பட்ட ஸ்ரீநிவாச பெருமாள் திருவண்ணாமலைக்கு எழுந்தருளினார். அங்கு உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன.

மாலை 4 மணியளவில் ஸ்ரீநிவாச பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி மலையைச் சுற்றி கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு

பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு கோயில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். டிஎஸ்பி பாலசுந்தரம் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔