சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/ஆன்மீகம்/சதுரகிரி காட்டுத்தீ கட்டுக்குள் வந்தது! பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய மாவட்ட ஆட்சியர் அனுமதி
ஆன்மீகம்

சதுரகிரி காட்டுத்தீ கட்டுக்குள் வந்தது! பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய மாவட்ட ஆட்சியர் அனுமதி

The News Outlook
🕒 12 ஆக., 2026, 05:05 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சதுரகிரி காட்டுத்தீ கட்டுக்குள் வந்தது! பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய மாவட்ட ஆட்சியர் அனுமதி

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஆடி அமாவாசை திருவிழாவிற்காக கடந்த 10 முதல் 13ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த கடந்த 2 நாட்களாக சதுரகிரி மலைப்பகுதியில் பரவிய காட்டு தீ காரணமாக பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நேற்று பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று இரவு காட்டுத்தீ எரிந்து வந்ததால் இன்றும் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்படுவதாகவும், இயல்பு நிலை திரும்பிய பின் பக்தர்கள் சதுரகிரி செல்ல அனுமதி வழங்கப்படும் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். தடை விதிக்கப்பட்ட நிலையிலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் திரண்டு அனுமதி வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நிலைமை சீரானதாக விருதுநகர் மாவட்ட காவல் துறை மற்றும் வனத்துறை ஆகியோர் தெரிவித்ததன் அடிப்படையில், இன்று (12.08.2026) காலை முதல் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு சதுரகிரி சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவிலுக்கு மலையேறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி விருதநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அதிகாலை முதல் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தற்போது அனுமதிக்கப்பட்டு மலை ஏறி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔