சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/தமிழகத்தில் சட்டம்-ஒழுங்குக்கு அவகாசம் கேட்க முடியாது: நெல்லையில் கீ.வீரமணி விமர்சனம்!
அரசியல்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்குக்கு அவகாசம் கேட்க முடியாது: நெல்லையில் கீ.வீரமணி விமர்சனம்!

🕒 19 ஆக., 2026, 08:32 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்குக்கு அவகாசம் கேட்க முடியாது: நெல்லையில் கீ.வீரமணி விமர்சனம்!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனைகள் கவலையளிப்பதாக உள்ளன. "பிரச்சனைகளைச் சரிசெய்ய ஐந்து ஆண்டுகள் அவகாசம் தேவை" என்ற ஆளுங்கட்சியின் தற்காப்பு வாதத்தை ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு என்பது தீயணைப்புத் துறை அல்லது அவசரச் சிகிச்சைப் பிரிவு போன்றது அதற்கு அவகாசம் கேட்க முடியாது, உடனடியாகச் செயல்பட வேண்டும். மேலும், காவல்துறை அதிகாரிகள் "ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசிகளாக" செயல்படக் கூடாது என நெல்லையில் திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார். நெல்லையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக வந்த திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் கொள்கை உறுதியோடு, தெளிவோடு நிற்பதே தந்தை பெரியாரின் வழிமுறையாகும். இன்றைய அரசியல் சூழலில் பதவிக்காகக் கட்சி மாறுபவர்கள் பெருகிவரும் வேளையில், கொள்கைப் பிடிப்பு இல்லாத பொதுவாழ்க்கைக்கு எதிராக இளைஞர்களிடம் பெரியாரின் கொள்கைகளைக் கொண்டு சேர்க்க வேண்டியது அவசியமாகிறது. ஜாதி வெறி, ஜாதி அடையாளம் மற்றும் ஜாதி ஆணவக் கொலைகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதே இப்பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும். இப்பிரச்சாரக் கூட்டத்திற்கும் இருசக்கர வாகனப் பேரணிக்கும் காவல்துறை முதலில் அனுமதி மறுத்தது. முந்தைய ஆட்சிகளிலும், தற்போதைய ஆட்சியின் தொடக்கத்திலும் இதுபோன்ற பிரச்சாரங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது திடீரென மறுக்கப்பட்டது குறித்து திராவிடர் கழகம் உயர் நீதிமன்றத்தை நாடியது. கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்க அரசுக்கு உரிமை இல்லை என்றும், குறிப்பிட்ட அமைப்புகளுக்கு மட்டும் இரட்டை அளவுகோல் கடைப்பிடிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் காவல்துறையை எச்சரித்ததைத் தொடர்ந்து, அனுமதி பெறுவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.‌ நீட் தேர்வை முதன்முதலில் எதிர்த்துப் போராடியது தமிழ்நாடு தான். தற்போது நீட் தேர்வின் தோல்விகளும், அதில் நடந்த ஊழல்களும் இந்தியா முழுவதும் வெளிச்சத்திற்கு வந்து, டெல்லி வரை எதிரொலித்து வருகின்றன. இருப்பினும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க அரசு பிடிவாதமாக இத்தேர்வைத் திணிக்கிறது. முறைகேடுகளுக்குத் தீர்வு காணாமல் அமைச்சரை மட்டும் மாற்றுவது போதாது. மாநிலத்தில் நடக்கும் ஆணவக் கொலைகள் மற்றும் கூலிப்படை கொலைகள் போன்ற சட்டம்-ஒழுங்குப் பிரச்சனைகள் கவலையளிப்பதாக உள்ளன. "பிரச்சனைகளைச் சரிசெய்ய ஐந்து ஆண்டுகள் அவகாசம் தேவை" என்ற ஆளுங்கட்சியின் தற்காப்பு வாதத்தை ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு என்பது தீயணைப்புத் துறை அல்லது அவசரச் சிகிச்சைப் பிரிவு (ICU) போன்றது அதற்கு அவகாசம் கேட்க முடியாது, உடனடியாகச் செயல்பட வேண்டும். மேலும், காவல்துறை அதிகாரிகள் "ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசிகளாக" செயல்படக் கூடாது. ஜனநாயகத்தில் கேள்வி கேட்கும் உரிமை எதிர்க்கட்சிகளுக்கும் மக்களுக்கும் உண்டு. மாற்றுக்கருத்துகளைத் தடுப்பது பாசிசமாகும். மத்தியில் மக்கள் விரோதத் திட்டங்கள் கொண்டு வரப்படும்போது அதை எதிர்க்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது. அரசியல் சாசனத்தின்படி பதவியேற்ற அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அதற்கேற்பச் செயல்பட வேண்டும் .மேலும், ‌பொருளாதார அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ள கொள்கைகளை விளக்குவதற்கும், நீட் தேர்வின் பாதிப்புகளைப் பரப்புரை செய்வதற்கும் திராவிடர் கழகம் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ளது என கூறினார் பேட்டியின் போது நெல்லை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆவுடையப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔