சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி மரணம்!
அரசியல்

கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி மரணம்!

🕒 2 அக்., 2026, 10:16 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி மரணம்!
✨

AI Highlights

  • •ஜெயங்கொண்டம் அருகே கணவர் ஆறுமுகம் உயிரிழந்த சில மணி நேரத்தில், அதிர்ச்சியில் மனைவி பழனியம்மாளும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ஜெயங்கொண்டம் அருகே வயது மூப்பின் காரணமாக கணவர் உயிரிழந்த அதிர்ச்சியில், சில மணி நேரத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கருப்பூர், வக்கரமாரி கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் – பழனியம்மாள் தம்பதி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், இருவரும் ஒருவருக்கொருவர் அன்பும் ஆதரவுமாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆறுமுகம் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில், வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு குறித்து தகவல் அறிந்த மனைவி பழனியம்மாள், கணவரின் பிரிவை தாங்க முடியாமல் அழுதுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கணவர் உயிரிழந்த சில மணி நேரத்திலேயே பழனியம்மாளும் உயிரிழந்தார்.

குழந்தைகள் இல்லாத நிலையில் ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்ந்து வந்த தம்பதி, அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்வில் மட்டுமின்றி இறப்பிலும் இணைபிரியாத தம்பதியின் மறைவு கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔