விருதுநகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாய்மென்ட் சார்பாக திட்டத் தலைவர் இளங்கோவன் தலைமையில், மாநில துணைத் தலைவர் மணிகண்டன் முன்னிலையில் தமிழ்நாடு அரசு மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் ,கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக மாற்றிட வேண்டும், தேர்வு செய்யப்பட்ட கேங்க் மேன் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையை உடனடியாக வழங்கிட வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நிறுவுவதை உடனடியாக கைவிட வேண்டும் மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் 10000 தொழிலாளர்களை பணி அமர்த்தும் முடிவை கைவிட்டு நேரடியாக நியமனம் செய்திட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
செய்திகள்
விருதுநகரில் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயிஸ் ஆர்ப்பாட்டம்!
🕒 17 செப்., 2026, 05:30 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •விருதுநகரில் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயிஸ் பெடரேஷன் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
