நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் கடந்த 12 -ந் தேதி ஆடி அமாவாசை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் இந்த கோவில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இந்த நிலையில் சொரிமுத்து யனார் கோவில் வளாகத்தில் இரவு நேரத்தில் நுழைந்த கரடி, கோவிலில் பேச்சியம்மன் சன்னதி முன் விளக்குகளில் இருந்த எண்ணெயை குடித்து சென்றது. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்த நிலையில் தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்திகள்
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளே நுழைந்த கரடி - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
🕒 21 ஆக., 2026, 05:13 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
