சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/உயர் மின்னழுத்தம் காரணமாக தூய்மைப் பணியாளர் வீடு தீப்பிடித்து எரிந்தது!
செய்திகள்

உயர் மின்னழுத்தம் காரணமாக தூய்மைப் பணியாளர் வீடு தீப்பிடித்து எரிந்தது!

🕒 5 அக்., 2026, 09:54 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
உயர் மின்னழுத்தம் காரணமாக தூய்மைப் பணியாளர் வீடு தீப்பிடித்து எரிந்தது!
✨

AI Highlights

  • •விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உயர் மின்னழுத்தம் காரணமாக தூய்மைப் பணியாளர் வீடு தீப்பிடித்து எரிந்த விபத்தில் ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் சேதமடைந்தன.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி செவல்பட்டி தொகுப்பு வீடு பகுதியில் உயர் மின்னழுத்த மின்சாரம் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், தூய்மைப் பணியாளர் வீடு முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. ரூ.3 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் தீயில் கருகியதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

காரியாபட்டி செவல்பட்டி தொகுப்பு வீடு பகுதியில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று மின்தடை செய்யப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்து பிற்பகல் 3.20 மணியளவில் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. மின்சாரம் வழங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, அப்பகுதியில் வசித்து வரும் காரியாபட்டி பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களான சின்ன மாரியப்பன் – முத்துலட்சுமி தம்பதியினரின் வீட்டில் திடீரென தீப்பற்றியுள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காரியாபட்டி தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். எனினும், இந்த விபத்தில் வீட்டில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, கலவை இயந்திரம், அரவை இயந்திரம், பீரோ, கட்டில் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களும், மேளம் மற்றும் நாதஸ்வரம் உள்ளிட்ட இசைக்கருவிகளும் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளன.

இந்த தீ விபத்தில் ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டபோது ஏற்பட்ட திடீர் மின்னழுத்தம் காரணமாக, அருகிலுள்ள சில வீடுகளிலும் தொலைக்காட்சி போன்ற மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்ததாக அப்பகுதி மக்கள் புகார் எழுப்பியுள்ளனர்.

மின் விநியோகம் சீரமைக்கப்பட்டபோது ஏற்பட்ட மின்னழுத்தக் கோளாறு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, காரணத்தைக் கண்டறிய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விபத்தில் தங்களது உடமைகளை முழுமையாக இழந்த முத்துலட்சுமி, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔