அரியலூர் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் சாலை மறியல்.. குழந்தைக்கு பால் கூட கொடுக்க முடியவில்லை. கோயிலுக்கு சென்று திரும்பிய பக்தர்களுக்கு அரியலூர் பேருந்து நிலைய நுழைவாயிலில் பொதுமக்கள் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அரியலூர் கல்லங்குறிச்சியில் அமைந்துள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சென்று திரும்பி பக்தர்களுக்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் சாலை மறியலில் ஈடுபட்டனர் மூன்று மணி நேரமாக காத்திருந்தும் பேருந்து வராததால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குழந்தைக்கு பால் கூட கொடுக்க முடியவில்லை என ஆவேசத்துடன் தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை சாலை மறியலில் கைவிட செய்து பேருந்துகளில் ஏற்றி அனுப்பினர் கோவிலுக்கு அதிக அளவு பக்தர்கள் வருவார்கள் அதற்கேற்றார் போல் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என திட்டமிடுதல் இல்லாதது இதற்கு காரணம் . பேருந்து வந்தவுடன் போட்டி போட்டுக் கொண்டு மக்கள் ஏறினர். பேட்டி நிஷா பாதிக்கப்பட்ட பெண்மணி
செய்திகள்
பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் சாலை மறியல்
🕒 5 அக்., 2026, 09:48 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •அரியலூர் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் சாலை மறியல்
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
