வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பேரிடர் கால மீட்புப் பணிகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ஷரண்யா முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன மீட்பு உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், மழைக் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களைத் துரிதமாக மீட்பது மற்றும் கட்டிட இடுபாடுகளில் சிக்கியவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது போன்ற பல்வேறு மீட்பு நடவடிக்கைகள் குறித்து செயல் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஏராளமான அரசுத்துறை அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.

