சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பூத் ஏஜெண்ட் கையொப்பம் இல்லாமல் வாக்குப்பதிவு இயந்திரம் : முறைகேடு நடைபெற்றுள்ளதாக திமுக வினர் சந்தேகம்.
செய்திகள்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பூத் ஏஜெண்ட் கையொப்பம் இல்லாமல் வாக்குப்பதிவு இயந்திரம் : முறைகேடு நடைபெற்றுள்ளதாக திமுக வினர் சந்தேகம்.

🕒 2 ஆக., 2026, 08:29 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பூத் ஏஜெண்ட் கையொப்பம் இல்லாமல் வாக்குப்பதிவு இயந்திரம் : முறைகேடு நடைபெற்றுள்ளதாக திமுக வினர் சந்தேகம்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பூத் ஏஜெண்ட் கையொப்பம் இல்லாமல் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளதாகவும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சந்தேகம் உள்ளதாகவும் சரிப்பாரப்பு பணியில் ஈடுபட்டிருந்த திமுகவினர் தெரிவித்துள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ தங்கப்பாண்டியனும், த.வெ.க சார்பில் ஜெகதீஸ்வரியும் போட்டியிட்டனர்.இதில் இதில் வெற்றி பெற்ற ஜெகதீஸ்வரி தற்போது அமைச்சராக உள்ளார். வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்திருக்கிலாம் எனவும் சரிபார்க்க வேண்டும் எனவும் தங்கப்பாண்டியன் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக அந்த 14 வாக்குப்பதிவு இயந்திரங்களையும் நேரடியாகச் சரிபார்க்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திடம் அவர் முறைப்படி கோரிக்கை விடுத்திருந்தார்.குறிப்பிட்ட 14 வாக்குச்சாவடி மைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் முன்னிலையில், பெல் நிறுவனப் பொறியாளர்கள் அந்த இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று 5 வது நாளாக சரிபார்க்கும் பணி நடைபெற்றது.அப்போது பூத் ஏஜெண்ட் கையொப்பம் இல்லாமல் பாகம் எண் 206 இல் உள்ள வாக்கு ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளதாகவும் இதனால் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சந்தேகம் உள்ளதாகவும் சரிப்பாரப்பு பணியில் ஈடுபட்டிருந்த திமுகவினர் தெரிவித்துள்ளனர். பேட்டி :- ராமமூர்த்தி :- திமுக நகர செயலாளர் ராஜபாளையம்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔