விருதுநகர்: மத்திய புள்ளியல் துறை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி! விருதுநகரில் மத்திய புள்ளியல் துறை சார்பில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராகப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விருதுநகரில் மத்திய புள்ளியல் துறை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மேற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் 50-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் மற்றும் சுற்றுச்சூழலை பிளாஸ்டிக் எவ்வாறு பாதிக்கின்றதுஉள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியபடி சென்றனர். மேற்கு காவல் நிலையம் முன்பிருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியானது, நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று இறுதியாக தேசபந்து மைதானத்தில் நிறைவடைந்தது.
செய்திகள்
விருதுநகர்: மத்திய புள்ளியல் துறை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!
The News Outlook
🕒 9 ஜூலை, 2026, 05:50 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
