சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/3 வருவாய் கோட்டங்களில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – செப்.22ல் நடைபெறுகிறது
செய்திகள்

3 வருவாய் கோட்டங்களில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – செப்.22ல் நடைபெறுகிறது

🕒 18 செப்., 2026, 04:44 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
3 வருவாய் கோட்டங்களில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – செப்.22ல் நடைபெறுகிறது

AI Highlights

  • விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் வருவாய் கோட்டங்களில் செப்.22 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் வகையில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 22.09.2026 அன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய மூன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில், அந்தந்த கோட்டங்களைச் சேர்ந்த உதவி ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் நேரடியாக கலந்து கொண்டு, விவசாயம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் தனிநபர் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்களிடம் வழங்கி தீர்வு பெறலாம்.

மேலும், வட்டார அளவில் பெறப்படும் விவசாயம் மற்றும் விவசாயம் சாராத மனுக்களுக்கும் விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி அறிவுறுத்தியுள்ளார். மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு தெரிவிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

எனவே, சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔