விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையேறிய தூத்துக்குடி பக்தர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு,ஆனி மாத அமாவாசை வழிபாட்டிற்கு சதுரகிரி மலை ஏறிய தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணி (54) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். தூத்துக்குடி கே.டி.சி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (54). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் மினரல் வாட்டர் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். ஸ்ரீவில்லிபுத்தூரை பூர்வீகமாக கொண்ட சுப்பிரமணி, ஆனி மாத அமாவாசை வழிபாட்டிற்கு சதுரகிரி கோயிலுக்கு நண்பருடன் வருகை புரிந்தார். காலை தாணிப்பாறை ஆடிவாரத்தில் இருந்து மலையேறிய சுப்பிரமணி கோண தலைவாசல் அருகே உள்ள வாகை மரம் என்ற பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மூச்சு திணறல் ஏற்பட்டு, சுப்பிரமணி மயக்கம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இந்த நிலையில் இது குறித்து தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அடிவாரப் பகுதியில் இருந்து சென்றவர்கள் டோலி மூலமாக சுப்பிரமணிய மீட்டு அடிவாரப் பகுதிக்கு கொண்டு வந்தனர்.சுப்பிரமணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து சாப்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் பிரதோஷம் அமாவாசை நான்கு நாட்கள் மற்றும் பிரதோஷம் பௌர்ணமி நான்கு நாட்கள் என எட்டு நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வரும் சூழ்நிலையில் அடிவாரப் பகுதியில் மருத்துவ குழு இல்லாததால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் எனவே வருங்காலங்களில் அடிவாரப் பகுதியில் மருத்துவக் குழுவை பணியமரத்தி பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
செய்திகள்
விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையேறிய தூத்துக்குடி பக்தர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
The News Outlook
🕒 14 ஜூலை, 2026, 01:25 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
