திருநெல்வேலிக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணி ஒருவர், மாநகரப் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த விளம்பரப் போஸ்டர்களை நகைச்சுவையாக வர்ணித்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களைப் பார்வையிட்ட அந்த வெளிநாட்டு பயணி, அதில் இடம்பெற்றிருந்த நபர்களின் புகைப்படங்களைக் காட்டி, அவர்களின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு தனது சொந்த பாணியில் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
போஸ்டர் கலாச்சாரத்தை ரசித்தவாறு வீடியோவை நிறைவு செய்த அவர், "தமிழ்நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபட நினைப்பவர்கள் திருநெல்வேலிக்கு மட்டும் வந்துவிடாதீர்கள்" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு பயணியின் இந்தப் பார்வை இணைய பயனர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

