சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/கீழடியை விட பெரிய செங்கற்களுடன் கூடிய பழங்கால மனித வாழ்விடம் கண்டுபிடிப்பு
செய்திகள்

கீழடியை விட பெரிய செங்கற்களுடன் கூடிய பழங்கால மனித வாழ்விடம் கண்டுபிடிப்பு

🕒 5 அக்., 2026, 12:00 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கீழடியை விட பெரிய செங்கற்களுடன் கூடிய பழங்கால மனித வாழ்விடம் கண்டுபிடிப்பு
✨

AI Highlights

  • •நெல்லை மாவட்டம் குப்பக்குறிச்சியில் தாமிரபரணி கரையில் கீழடியை விட பெரிய செங்கற்களுடன் கூடிய 2,000 ஆண்டுகள் பழமையான மனித வாழ்விடத்தை பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகேயுள்ள குப்பக்குறிச்சி பகுதியில், தாமிரபரணி மற்றும் சிற்றாறு இணையும் கரையில் பழங்கால மனித வாழ்விடப் பகுதியை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை மாணவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இப்பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு முதுகலை தொல்லியல் மாணவர் காலபொருமாள், இப்பகுதியில் உள்ள முண்டன் கோயில் அருகே பழங்கால எச்சங்களை முதன்முதலில் கண்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, தொல்லியல் துறைத் தலைவர் (பொறுப்பு) பேராசிரியர் சி. சுதாகர் வழிகாட்டுதலின்படி, பேராசிரியர்கள் மற்றும் மாணக் குழுவினர் அங்கு மேற்பரப்பு கள ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வில் இரண்டடி விட்டமுள்ள உரைகிணறுகள், பாசி மணிகள், வட்டச்சில்லுகள், சுடுமண் காதணிகள், பானை ஓடுகள், வளையல் துண்டுகள், செம்பு வளையல் மற்றும் சுடுமண் தக்களிகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், பழங்காலச் செங்கல் கட்டுமானங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

இங்கு கண்டெடுக்கப்பட்ட செங்கற்கள் 39 செ.மீ நீளம், 30 செ.மீ அகலம் மற்றும் 9 செ.மீ உயரம் கொண்டுள்ளன. கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட செங்கற்கள் (36 செ.மீ நீளம், 24 செ.மீ அகலம், 6 செ.மீ தடிமன்) அளவை விட இவை பெரியவை என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்ற செங்கல் கட்டுமானம் மடத்துப்பட்டி கிராமத்திலும் கண்டறியப்பட்டுள்ளது.

தொல்லியல் பேராசிரியர்கள் முருகன் மற்றும் மதிவாணன் ஆகியோர் இப்பொருட்களை ஆய்வு செய்து, இவை சுமார் 1,000 முதல் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனத் தெரிவித்தனர். செங்கல்களின் காலத்தைக் கண்டறியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் துறைத் தலைவர் சி. சுதாகர் தெரிவித்தார். கள ஆய்வில் ஈடுபட்ட மாணவர்களையும் பேராசிரியர்களையும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் (பொறுப்பு) பிரபாகர் பாராட்டினார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔