சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/விடுதி மாணவர்களுக்கு தரமான உணவு தயாரிக்கும் முறை குறித்த பயிற்சி!
செய்திகள்

விடுதி மாணவர்களுக்கு தரமான உணவு தயாரிக்கும் முறை குறித்த பயிற்சி!

🕒 5 அக்., 2026, 09:43 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விடுதி மாணவர்களுக்கு தரமான உணவு தயாரிக்கும் முறை குறித்த பயிற்சி!
✨

AI Highlights

  • •அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாணவர் விடுதிகளுக்கு தரமான உணவு தயாரிக்கும் முறை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் மாணவர்களுக்கு தரமான முறையில் உணவு தயாரிக்கும் முறை குறித்த பயிற்சி அக்டோபர் 3, 2026 அன்று நடைபெற்றது. கடந்த அக்டோபர் 1, 2026 அன்று பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலாளர் மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர், மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதிகள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கான சமூக நீதி விடுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். விடுதிகளில் அடிப்படை வசதிகள், உணவு தயாரிக்கும் முறை மற்றும் உணவின் தரம் குறித்து ஆய்வு நடத்தி உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, மாணவர்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான உணவு தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்யும் நோக்கில், தனலட்சுமி சீனிவாசன் கேட்டரிங் கல்லூரியின் தலைமை சமையலர் மூலம் உணவு தயாரிக்கும் முறைகள் குறித்த சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், உணவின் தரத்தை உயர்த்துவதற்கான வழிமுறைகள், சமையல் உபகரணங்களை தூய்மையாகப் பராமரித்தல், பாதுகாப்பான முறையில் உணவு வழங்குதல் மற்றும் உணவுப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுதல் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் தரமான, சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான உணவு தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந. மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔