விருதுநகர் மாவட்டம் சிவகாசி அண்ணா காய்கறி சந்தையில் தக்காளியின் விலை திடீரென அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி, தற்போது இரு மடங்கு உயர்ந்து கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாகவும் காய்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சிவகாசி சந்தையில் மற்ற காய்கறிகளின் விலையும் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகிறது. பெரிய வெங்காயம் கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரையிலும், சின்ன வெங்காயம் ரூ.90 முதல் ரூ.110 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், அவரைக்காய் ரூ.110, பீன்ஸ் ரூ.100, உருளைக்கிழங்கு ரூ.60, கேரட் ரூ.50, பீட்ரூட் ரூ.40 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

