தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (அக்டோபர் 3) மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுடன் மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 8 மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பிற பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
மேலும், அக்டோபர் 4-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. அக்டோபர் 5 மற்றும் 6-ம் தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

