சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/சாலையோர தடுப்பில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த லாரி
செய்திகள்

சாலையோர தடுப்பில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த லாரி

🕒 18 செப்., 2026, 11:05 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சாலையோர தடுப்பில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த லாரி

AI Highlights

  • ஏனாதி அருகே சிவகங்கை–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சென்டர் மீடியனில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. டீசல் கசிந்ததால் தீயணைப்புத் துறையினர் நுரை தெளித்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

சிவகங்கை அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்ததில், லாரியில் இருந்த டீசல் சாலையில் பெருமளவில் கசிந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத் துறையினர் நுரை தெளித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

காரைக்காலில் இருந்து பொட்டாசியம் குளோரைடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சிவகங்கை நோக்கி வந்து கொண்டிருந்தது. சிவகங்கை–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏனாதி பகுதியில் உள்ள வளைவில் லாரி சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து லாரி சென்டர் மீடியன் தடுப்புச்சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. விபத்தின் தாக்கத்தில் லாரியின் டேங்கில் இருந்த டீசல் சாலையில் அதிகளவில் கசிந்து கொட்டியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிவகங்கை தீயணைப்புத் துறையின் உதவி மாவட்ட அலுவலர் ஜெயராணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

சாலையில் கொட்டிய டீசல் காரணமாக தீப்பற்றும் அபாயம் இருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வீரர்கள் நுரை தெளித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து லாரியை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட மீட்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

விபத்து காரணமாக சிவகங்கை–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ஏனாதி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔