நெல்லை மாவட்டம் தாழையூத்து காவல் எல்லைக்குட்பட்ட மாடர்ன் ரைஸ் மில் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ஒருவர் நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த நபரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர், ராஜவல்லிபுரம், மேலத்தெருவைச் சேர்ந்த இசக்கிமுத்து (எ) ராஜா (34) என்பதும், தாழையூத்து காவல் நிலையத்தின் ‘A’ வகை சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்ய முயன்றபோது, தன்னை நெருங்கினால் சுட்டுக் கொன்று விடுவதாக போலீசாருக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இருப்பினும் போலீசார் அவரை பாதுகாப்பாகக் கட்டுப்படுத்தி கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு நாட்டுத்துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் குறித்து தாழையூத்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இசக்கிமுத்து (எ) ராஜா நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்திகள்
நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே நாட்டுத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
🕒 14 ஆக., 2026, 11:17 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
