தென்காசி மாவட்டம் பாபநாசத்தில் இருந்து சிவகாசி வழியாக மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் சுமார் 20 பயணிகள் பயணம் செய்தனர்.
சிவகாசி அருகே திருத்தங்கல் பேருந்து நிலையம் பகுதியில் பேருந்து சென்றபோது, முன்னால் சென்ற இருசக்கர வாகனம் திடீரென இடதுபுறமாக திரும்பியதாக கூறப்படுகிறது.
ஓடையில் பாய்ந்த பேருந்து
இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை இடதுபுறமாக திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த நீர்வரத்து ஓடையில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.எனினும், பேருந்து கவிழாமல் ஓட்டுநர் சாமர்த்தியமாக கட்டுப்படுத்தியதால், பேருந்தில் இருந்த சுமார் 20 பயணிகளும் காயமின்றி உயிர் தப்பினர். விபத்து குறித்து திருத்தங்கல் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஓடையில் பாய்ந்த அரசு பேருந்தை மீட்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

