சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/சர்வதேச முதியோர்கள் தின விழா – ஆட்சியர் மிருணாளினி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
செய்திகள்

சர்வதேச முதியோர்கள் தின விழா – ஆட்சியர் மிருணாளினி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

🕒 1 அக்., 2026, 09:09 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சர்வதேச முதியோர்கள் தின விழா – ஆட்சியர் மிருணாளினி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
✨

AI Highlights

  • •அரியலூர் கொல்லாபுரம் அன்னபூரணி முதியோர் இல்லத்தில் சர்வதேச முதியோர்கள் தின விழா ஆட்சியர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. முதியோர்களுக்கு ஊன்றுகோல், காதொலிக் கருவிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

அரியலூர் மாவட்டம் கொல்லாபுரம் அன்னபூரணி முதியோர் இல்லத்தில் சர்வதேச முதியோர்கள் தின விழா மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி, இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முதியோர்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, முதியோர் இல்லத்தில் தங்கியுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு, குடிநீர், தங்குமிடம், மருத்துவம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து இல்ல நிர்வாகிகளிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.

முதியோர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியமான வாழ்வு

முதியோர்களை மதிப்பதும், அவர்களின் தேவைகளை அறிந்து உரிய உதவிகளை வழங்குவதும் ஒவ்வொருவரின் முக்கிய பொறுப்பு என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

வயது முதிர்ந்த காலத்திலும் முதியோர்கள் தன்னம்பிக்கையுடனும், பாதுகாப்புடனும், கண்ணியத்துடனும் வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்றும், அவர்களின் உடல் நலத்துடன் மனநலம், பாதுகாப்பு மற்றும் அன்றாட தேவைகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், முதியோர்களின் நலனுக்காக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களை அறிந்து, அவற்றை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

முதியோர்களுடன் கலந்துரையாடிய ஆட்சியர்

விழாவைத் தொடர்ந்து கொல்லாபுரம் அன்னபூரணி முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்களிடம் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார்.

சர்வதேச முதியோர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற முதியோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், முதியோர்களுக்கு ஊன்றுகோல், காதொலிக் கருவிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் விக்னேஸ்வரி, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரேமி, அரியலூர் வட்டாட்சியர் மஞ்சுளா, முதியோர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔