திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் போதை ஊசிகள் பயன்பாடு சமீப காலமாகவே அதிகரித்து வருகிறது போதை ஊசி செலுத்திக்கொண்டு மூன்று பேர் உயிரிழந்த சம்பவமும் கடந்த 40 நாட்களில் நடந்துள்ளது இந்த நிலையில் அதனை தடுப்பதற்கு காவல்துறையும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் திருச்சி பெரிய கடை பகுதியில் கணேஷ் பாண்டியன் என்பவரது வீட்டில் போதை மாத்திரைகள் இருப்பதாக போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது அதனை எடுத்து அவர்களும் ஓட்டை போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர் அதில் கணேஷ் பாண்டியன் வீட்டில் இருந்து 17,500 போதை மாத்திரைகள் 4 செல்போன்கள் 5 பட்டாகத்தி லேப்டாப் இருசக்கர வாகனம் மற்றும் ரூ.1,00,550 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த கணேச பாண்டியன் மற்றும் அவருக்கு உடனடியாக இருந்த கார்த்திக் என்பவரையும் கோட்டை போலீசார் கைது செய்து அவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 17,500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
செய்திகள்
திருச்சியில் 17,500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
The News Outlook
🕒 16 ஜூலை, 2026, 04:28 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
