சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட வணிகர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..!
செய்திகள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட வணிகர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..!

🕒 23 ஜூலை, 2026, 08:41 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட வணிகர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக மாநகராட்சி அதிகாரிகள் வருகை புரிந்தனர். முன்னதாகவே சில வணிகர்கள் தங்கள் கடையின் முன்பாக இருந்த ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொண்டாலும் பேருந்து நிலையதிலிருந்து பேருந்துகள் வெளியே செல்லும் நுழைவாயில் அருகே இருந்த தேநீர் கடை உள்ளிட்ட சில கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தன. அந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்காததால் மற்ற வணிகர்கள் மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு லஞ்சம் வாங்கிக்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாராபட்சம் காட்டுவதாகவும், பேருந்து நிலையத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள வணிகர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஆக்கிரமிப்பை அகற்ற தயக்கம் காட்டுவதாகவும், பேருந்து நிலையத்திற்குள் புதிதாக கட்டப்பட்டுள்ள எத்தனையோ கடைகள் காலியாக உள்ளபோது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான இடத்தில் கடைகள் நடத்த அனுமதிப்பது ஏன் எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. வணிகர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமலும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔