சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/3 மாதங்களாக நூல் வழங்கவில்லை: ஸ்ரீவில்லிபுத்தூரில் கைத்தறி நெசவாளர்கள் கஞ்சித் தொட்டி போராட்டம்
செய்திகள்

3 மாதங்களாக நூல் வழங்கவில்லை: ஸ்ரீவில்லிபுத்தூரில் கைத்தறி நெசவாளர்கள் கஞ்சித் தொட்டி போராட்டம்

🕒 17 செப்., 2026, 11:24 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
3 மாதங்களாக நூல் வழங்கவில்லை: ஸ்ரீவில்லிபுத்தூரில் கைத்தறி நெசவாளர்கள் கஞ்சித் தொட்டி போராட்டம்

AI Highlights

  • ஸ்ரீவில்லிபுத்தூரில் 3 மாதங்களாக நூல் வழங்காததை கண்டித்து கைத்தறி நெசவாளர்கள் கஞ்சித் தொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பள உயர்வு மற்றும் வேலை வழங்கவும் கோரிக்கை.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், கைத்தறி நெசவாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக நூல் வழங்கப்படாததையும், சம்பளத்தை உயர்த்தி வழங்காததையும் கண்டித்து நெசவாளர்கள் இன்று கஞ்சித் தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான சுந்தரபாண்டியம், பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் மூலம் நூல் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தரம் குறைந்த நூலுக்கு பதிலாக மேம்படுத்தப்பட்ட தரம் கொண்ட புதிய ரக நூல் வழங்கப்படும் என அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, பழைய ரக நூல் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக நெசவாளர்கள் தெரிவித்தனர். ஆனால், நூல் வழங்குவது நிறுத்தப்பட்டு மூன்று மாதங்கள் கடந்தும் புதிய ரக நூல் வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதனால் கடந்த மூன்று மாதங்களாக வேலை மற்றும் வருமானம் இன்றி தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக நெசவாளர்கள் தெரிவித்தனர். நூல் வழங்கக் கோரி பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

இதையடுத்து, மாயாண்டிப்பட்டி தெருவைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் இன்று காலை திடீரென கஞ்சித் தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வருமானம் இன்றி தவித்து வரும் நிலையில், காலை மற்றும் மதிய உணவுக்காக கஞ்சித் தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், தமிழக அரசைக் கண்டித்து நெசவாளர்கள் கோஷங்களை எழுப்பினர். தங்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், வேலைவாய்ப்பு மற்றும் சம்பள உயர்வுடன் நூல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

போராட்டம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நெசவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களுக்குத் தேவையான நூல் வழங்கப்பட்டு, வேலை மற்றும் சம்பள உயர்வு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என நெசவாளர்கள் தெரிவித்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔