சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/19 ஆண்டுகளுக்கு பிறகு செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்!
செய்திகள்

19 ஆண்டுகளுக்கு பிறகு செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்!

🕒 17 செப்., 2026, 06:50 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
19 ஆண்டுகளுக்கு பிறகு செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்!

AI Highlights

  • நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் உள்ள செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நெல்லை மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள செப்பறை அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை ஸ்ரீ அழகிய கூத்தர் திருக்கோவிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த திருத்தலம் பல்வேறு புராண சிறப்புகளை கொண்டதாகும். அக்னி பகவான், அகத்தியர், வாமதேவரிஷி மற்றும் ராமபாண்டிய மன்னன் ஆகியோருக்கு சிவபெருமான் தனது நடன தரிசனத்தை வழங்கிய சிறப்புடைய தலமாக செப்பறை திருக்கோவில் விளங்குகிறது.

இதையடுத்து கோவிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்ற நிலையில், இன்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 13-ஆம் தேதி காலை ஸ்ரீ கணபதி ஹோமத்துடன் தொடங்கின. தொடர்ந்து பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

கும்பாபிஷேக தினமான இன்று அதிகாலை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித கலசங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் நடராஜர் கோபுரங்களுக்கு புனித கலச நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மதியம் சுவாமி, அம்பாளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றதுடன், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று இரவு சுவாமி-அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும், தொடர்ந்து சுவாமி வீதி உலாவும் நடைபெற உள்ளன.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔