விருதுநகரில் உள்ள தனியார் மஹாலில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் 5-வது மாநில மாநாடு நடைபெற்றது. மாநிலத் தலைவர் நாராயணன் தலைமை வகித்த இந்த மாநாட்டிற்கு, பாலசுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், வழக்கறிஞருமான வாஞ்சிநாதன் 'மதம் பிடித்தால்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
மாநாட்டின் முக்கிய கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்கள்:
- வருவாய் கிராம உதவியாளர்களுக்கு இணையாக ரூ.6,750 சிறப்பு ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படி வழங்க வேண்டும்.
- மாதாந்திர மருத்துவப்படியாக ரூ.300 வழங்குவதோடு, தேசிய மருத்துவக் காப்பீடு மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
- குடும்பநல நிதியாக ரூ.50,000 மற்றும் இலவச பேருந்து பாஸ் வழங்க வேண்டும்.
- ப பதவி உயர்வில் சென்ற ஊர் நல அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 அல்லது அரசாணை 41-ன் படி சிறப்பு ஓய்வூதியம் ரூ.3,400 வழங்க வேண்டும்.
இம்மாநாட்டைத் தொடர்ந்து, மாலையில் நகராட்சி பூங்காவில் பொதுக்கூட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது.

