சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/6 ஆண்டுகளாக சேதமடைந்து கிடக்கும் பாலம்: அவசர ஊர்திகள் செல்ல முடியாமல் மக்கள் அவதி!
செய்திகள்

6 ஆண்டுகளாக சேதமடைந்து கிடக்கும் பாலம்: அவசர ஊர்திகள் செல்ல முடியாமல் மக்கள் அவதி!

🕒 5 அக்., 2026, 10:12 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
6 ஆண்டுகளாக சேதமடைந்து கிடக்கும் பாலம்: அவசர ஊர்திகள் செல்ல முடியாமல் மக்கள் அவதி!
✨

AI Highlights

  • •விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சேதமடைந்துள்ள பாலத்தால் அவசர ஊர்திகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், புதிய பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஆனையூர் ஊராட்சிக்குட்பட்ட அய்யம்பட்டி அம்மன் நகர் சாலையில் அமைந்துள்ள பாலம் சேதமடைந்துள்ளதால், அவசர கால ஊர்திகள் கூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று உடனடியாக புதிய பாலம் அமைத்துத் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அய்யம்பட்டி அம்மன் நகர் செல்லும் சாலையின் குறுக்கே உள்ள ஓடையில், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் பாலம் அமைக்கப்பட்டது. முறையான பராமரிப்பு இன்றி தரமற்ற முறையில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இப்பாலம், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே நடுப்பகுதியில் ஓட்டை விழுந்து சேதமடைந்தது. தற்போது அந்த ஓட்டையின் அளவு மேலும் அதிகரித்து வருவதால், அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தரப்பில் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார்கள் அளிக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள இந்த பழைய பாலத்தை முழுமையாக அகற்றிவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தரமான புதிய பாலம் அமைத்துத் தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் அவசர வேண்டுகோளாக உள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔