விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியை சுற்றி கோபாலபுரம், தம்பிபட்டி ,கூமாபட்டி, நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகிறது .இந்தப் பகுதியில் தயாரிக்கப்படும் செங்கல்லானது மிகவும் பிரசித்த பெற்றதாகவும் தரமானதாகவும் கருதப்படுகிறது. இதனால் இங்கு உற்பததி செய்யப்படும் செங்கல்லானது விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் நம்பி சுமார் 3000 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக சரிவர மண் கிடைக்காததால் தொழில் செய்யமுடியாத நிலை உள்ளதாக செங்கல் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த தொழில் நடைபெறாமல் உள்ளதால் தொழிலுக்காக வாங்கிய வாகனக்கடன் தொழில்கடன் செலுத்த முடியாததால் நிதி நிறுவனங்களிடம் இருந்து மிகவும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தங்களது மன வேதனையை தெரிவிக்கின்றனர் .இத்தொழிலை நம்பி சுற்றியுள்ள கிராம மக்கள் விறகு வெட்டி பிழைத்து வந்த நிலையில் அவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசு தலையிட்டு வாழ்வாதாரமான செங்கல் தொழிலை காக்க கண்மாய்களில் மண் எடுக்க அனுமதி அளிக்குமாறு செங்கல் சூளை உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேட்டி : நாராயணன் (நாட்டு செங்கல் உற்பத்தி சங்க மாவட்ட தலைவர்)
செய்திகள்
கண்மாய்களில் மண் அள்ள அனுமதி வழங்க கோரிக்கை – செங்கல் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்
🕒 19 ஆக., 2026, 03:30 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

