சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 438 மனுக்கள்பெறப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 438 மனுக்கள்பெறப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

🕒 5 அக்., 2026, 11:32 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 438 மனுக்கள்பெறப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
✨

AI Highlights

  • •அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 438 மனுக்கள் பெறப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ந. மிருணாளினி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன் மற்றும் பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 438 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். முன்னதாக, குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்த மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு நபருக்கு மூன்று சக்கர சைக்கிளும், நான்கு நபர்களுக்கு காதொலிக் கருவிகளும் வழங்கப்பட்டன. மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் 'தமிழ்நாடு உரிமைகள் திட்டம்' மற்றும் 'சம்ருதி பவுண்டேஷன்' தொண்டு நிறுவனம் இணைந்து, செந்துறை வட்டாரத்தில் ஆலோசகர் மற்றும் சமூகநலப் பணியாளராகப் பணிபுரிவதற்கான பணி ஆணையினை ஒருவருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

மருவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி. பாரதி என்பவர் தனது மனவளர்ச்சி குன்றிய மகனைப் பராமரிக்கவும், பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் கோரி அளித்த மனுவை ஏற்று உடனடியாகப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. தனக்கு வேலைவாய்ப்பு வழங்கிய மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. க. ரா. மல்லிகா, மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔