சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக தொடர்கிறது: சௌமியா அன்புமணி பேட்டி
செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக தொடர்கிறது: சௌமியா அன்புமணி பேட்டி

🕒 5 அக்., 2026, 11:39 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக தொடர்கிறது: சௌமியா அன்புமணி பேட்டி
✨

AI Highlights

  • •தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக நீடிக்கிறது... தாமிரபரணியை பாதுகாக்க தமிழக அரசு விரிவான திட்டம் வகுக்க வேண்டும் திட்ட அறிக்கை தயார் செய்து மத்திய அரசிற்கு உடனடியாக வழங்க வேண்டும்- சௌமியா அன்புமணி திருநெல்வேலியில் பேட்டி

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

பாட்டாளி மக்கள் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதாகவும், கூட்டணியில் இல்லை என கூறுவது தவறான தகவல் என்றும் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். தாமிரபரணியை பாதுகாக்க சுத்தம் செய்ய மத்திய அரசு கேட்டுள்ள விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசு விரைவில் வழங்க வேண்டும் அதற்கான முயற்சியை பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொள்ளும் என திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த சௌமியா அன்புமணி தெரிவித்தார் திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்கும் நோக்கில் சென்னை வாழ் நெல்லை மக்கள் ஏற்பாட்டின் பேரில் சௌமியா அன்புமணி நேரடியாக திருநெல்வேலிக்கு வந்து தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலக்கும் குறுக்குத் துறை பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார் பறந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார் ஆளுங்கட்சிக்கு எதிராக இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், அந்த கோரிக்கையை மற்ற கட்சிகள் ஏற்காமல் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டை பாமக எடுத்துள்ளதாகவும் கூறினார். மதுராந்தகம் தொகுதியில் பாமகவுக்கு ஆதரவான மக்கள் ஏராளமாக இருப்பதாகவும் சௌமியா அன்புமணி தெரிவித்தார். தாமிரபரணியை பாதுகாக்க வேண்டும் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய தமிழக அரசை வலியுறுத்தப் போவதாகவும் அவர் கூறினார். தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், தமிழகத்தின் முக்கிய ஜீவநதியான தாமிரபரணியை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஜெர்மன் வங்கி உதவியுடன் ரூ.59 கோடி மதிப்பீட்டில் தாமிரபரணி ஆற்றின் நீரோட்டத்தை தடுக்கும் வகையில் அழகுபடுத்தும் நோக்கில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள இருந்ததை தாமிரபரணி ஆர்வலர்கள் தடுத்து நிறுத்த கோரிக்கை விடுத்தனர் ஆட்சியர் ஆற்றின் குறுக்கே இவ்வித கட்டுமான பணிகளும் மேற்கொள்ளாது என உறுதி அளித்துள்ளார் இந்த நிலையில் அந்தத் தொகையை வைத்து கரையோரத்தில் உள்ள கல் மண்டபங்கள் மற்றும் படித்துறைகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். . தென்னகத்தின் காசி என அழைக்கப்படும் தாமிரபரணி கரை மாசடைந்து காணப்படுவது வேதனை அளிப்பதாக தெரிவித்த சௌமியா அன்புமணி, பாபநாசம் பகுதியில் ஆறு தொடங்கும் இடத்திலேயே கழிவுகள் கலக்கத் தொடங்குவதாக குற்றம்சாட்டினார். நகராட்சி கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள், மாநகராட்சி கழிவுகள் என பல்வேறு வகையான கழிவுகள் ஆற்றில் கலப்பதால் தாமிரபரணி தனது இயல்பை இழந்து வருவதாகவும், இதனை தடுக்க அரசு உரிய திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் கூறினார். தன்னார்வலர்களையும் இணைத்துக்கொண்டு தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், ராஜஸ்தானைச் சேர்ந்த நீரியல் நிபுணர் ராஜேந்திர சிங் திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றை ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளதாகவும், அந்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்தார். அந்த அறிக்கையை வெளியிட்டு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சௌமியா அன்புமணி வலியுறுத்தினார் பேட்டியின் போது பாமக பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர் சௌமியா அன்புமணியின் ஆய்வின்போது அப்பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த வீத லீடர்ஸ் அமைப்பினரும் அவரை சந்தித்தனர்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔