சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விருதுநகர் மாவட்டம் வாடியூர் கிராம மக்கள் மனு
செய்திகள்

குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விருதுநகர் மாவட்டம் வாடியூர் கிராம மக்கள் மனு

🕒 13 ஜூலை, 2026, 11:31 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விருதுநகர் மாவட்டம் வாடியூர் கிராம மக்கள் மனு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விருதுநகர் மாவட்டம் வாடியூர் கிராம மக்கள் மனு!* விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திரப் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாடியூர் ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 50 மேற்பட்டோர் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றினை அளித்தனர். விருதுநகர் மாவட்டம் வாடியூர் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் எங்கள் பகுதி மக்களுக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான குடிநீர் வினியோகம், கடந்த ஒரு மாத காலமாக வழங்கப்படாமல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தினசரித் தேவைக்கான குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியாமல், அன்றாட வாழ்க்கையை நடத்தவே இப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம். குடிநீர் தட்டுப்பாடு மட்டுமன்றி, கடந்த சில வருடங்களாகவே எங்கள் பகுதியில் முறையான சாலை வசதிகளோ, தெருவிளக்கு வசதிகளோ செய்து தரப்படவில்லை. மேலும், சாக்கடைக் கழிவுநீர் செல்வதற்கான முறையான வடிகால் (கால்வாய்) வசதி இல்லாததால், கழிவுநீர் ஆங்காங்கே தெருக்களில் தேங்கி நின்று சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து, குழந்தைகளுக்குப் பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் நிலவி வருகிறது. எனவே விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அடிப்படை வசதிகளை செய்து தருமாறு பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔