காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பா. சிதம்பரத்தின் 81வது பிறந்தநாளை முன்னிட்டு, பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் மற்றும் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டதுடன், அங்குள்ளவர்களுக்கு காலை உணவும் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளர் எம்.கே. யோபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராமேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கேக் வெட்டி, முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு காலை உணவு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மரிய குழந்தை, ராம் குமார், அருள்ராஜ், ராஜகுரு, தயாநிதி, ராஜா மெர்சி, விஸ்வநாதன், செந்தில், அனிஷ், சிவகுமார், வின்சென்ட் பாபு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

