சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/வெளுத்து வாங்கிய கனமழை – சீவலப்பேரியில் ஆலங்கட்டி மழை
செய்திகள்

வெளுத்து வாங்கிய கனமழை – சீவலப்பேரியில் ஆலங்கட்டி மழை

🕒 18 செப்., 2026, 04:57 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வெளுத்து வாங்கிய கனமழை – சீவலப்பேரியில் ஆலங்கட்டி மழை

AI Highlights

  • நெல்லை மாநகரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கனமழை பெய்தது. சீவலப்பேரி பகுதியில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நெல்லை மாநகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது.

நெல்லை மாநகரப் பகுதிகளான பாளையங்கோட்டை, சமாதானபுரம், வி.எம்.சத்திரம், தியாகராஜ நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்த மழையால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

இதனால் சில பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனிடையே, நெல்லை அருகே உள்ள சீவலப்பேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. சாலைகளில் ஆலங்கட்டிகள் சிதறி விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

ஆலங்கட்டிகளை கண்ட சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் அவற்றை கைகளில் எடுத்து பார்த்து மகிழ்ந்தனர். கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையால் நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔