சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/ரூ.10 லட்சம் கமிஷன் பெற்றுக்கொண்டு ரூ.1 கோடி கடன் வாங்கித் தருவதாக மோசடி புகார் – 5 பேர் கைது
செய்திகள்

ரூ.10 லட்சம் கமிஷன் பெற்றுக்கொண்டு ரூ.1 கோடி கடன் வாங்கித் தருவதாக மோசடி புகார் – 5 பேர் கைது

🕒 18 செப்., 2026, 09:36 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
ரூ.10 லட்சம் கமிஷன் பெற்றுக்கொண்டு ரூ.1 கோடி கடன் வாங்கித் தருவதாக மோசடி புகார் – 5 பேர் கைது

AI Highlights

  • ரூ.10 லட்சம் கமிஷன் பெற்றுக்கொண்டு ரூ.1 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றியதாக புகார். நெல்லையில் வெங்கடேஷ் உள்ளிட்ட 5 பேர் கைது; வீட்டில் 1.4 கிலோ கஞ்சா பறிமுதல்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ரூ.10 லட்சம் கமிஷன் பெற்றுக்கொண்டு ரூ.1 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரம் போலீசார் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே தெற்கு பாப்பாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், நிதி சார்ந்த தொழிலிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சென்னையைச் சேர்ந்த முகமது அக்தர் என்பவருடன் வெங்கடேஷுக்கு பழக்கம் இருந்ததாகவும், குறைந்த வட்டியில் தொழில் அதிபர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று, கூடுதல் வட்டிக்கு பிறருக்கு கடனாக வழங்கி வந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் தனது தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்ய ரூ.1 கோடி கடன் தேவைப்பட்டதாக தெரிகிறது. இதற்காக முகமது அக்தர் மூலம் வெங்கடேஷிடம் பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

ரூ.1 கோடி கடன் வாங்கித் தருவதற்கு ரூ.10 லட்சம் கமிஷன் வழங்க வேண்டும் என பேசி, அந்த தொகை பெற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், 4 மாதங்கள் கடந்தும் ஜெயச்சந்திரனுக்கு ரூ.1 கோடி கடன் பெற்றுத் தரப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதாக கருதிய ஜெயச்சந்திரன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததாக தெரிகிறது. அந்த புகார் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார் தெற்கு பாப்பாங்குளத்தில் உள்ள வெங்கடேஷின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மேலும் சிலரிடம் கடன் வாங்கித் தருவதாகக் கூறி கமிஷன் பெற்றுக்கொண்டு, பணத்தை பெற்றுத் தராமல் இருந்ததாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து வெங்கடேஷ், முகமது அக்தர், சிவசுப்பிரமணியன், கதிர்வேல் பாண்டி, ராஜேஷ் ஆகிய 5 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

வீட்டில் 1.4 கிலோ கஞ்சா பறிமுதல்

இதனிடையே வெங்கடேஷின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது, சுமார் 1.4 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தாரா அல்லது வேறு காரணத்திற்காக வைத்திருந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சாவை வரவழைத்து, ராமதாஸ் என்பவர் மூலம் உள்ளூரில் விற்பனை செய்ததாக போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து வெங்கடேஷ் மற்றும் கஞ்சா விற்பனைக்கு உதவியதாக கூறப்படும் ராமதாஸ் ஆகியோர் மீதும் தனியாக கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிதி மோசடி வழக்கில் வெங்கடேஷ் உள்ளிட்ட 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராமதாஸுக்கு பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான குற்றச்சாட்டில் தொடர்பு இல்லை என்றும், கஞ்சா தொடர்பான வழக்கில் மட்டும் அவர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி மோசடி மற்றும் கஞ்சா தொடர்பான வழக்குகள் என வெங்கடேஷ் மீது மொத்தம் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔