சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/ராஜபாளையம் கல்லூரி நிகழ்ச்சியில் நாசா விண்வெளி வீரர் டான் தாமஸ் பங்கேற்பு.
செய்திகள்

ராஜபாளையம் கல்லூரி நிகழ்ச்சியில் நாசா விண்வெளி வீரர் டான் தாமஸ் பங்கேற்பு.

🕒 19 ஆக., 2026, 12:36 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ராஜபாளையம் கல்லூரி நிகழ்ச்சியில் நாசா விண்வெளி வீரர் டான் தாமஸ் பங்கேற்பு.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் “விண்மீன்களைத் தொட்ட மனிதரை சந்திப்போம்” என்ற தலைப்பில் அறிவியல் கருத்தரங்கம் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தின் 40 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நாசா விண்வெளி வீரர் டாக்டர் டான் தாமஸ், விண்வெளி ஆய்வு, அறிவியல் முன்னேற்றம், விண்வெளி பயண அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்களிடம் உரையாற்றினார். அறிவியலின் மீது ஆர்வம் வளர்த்துக் கொள்ளவும், ஆராய்ச்சி மனப்பான்மையை உருவாக்கவும் அவர் மாணவர்களை ஊக்குவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு டாக்டர் டான் தாமஸ் விரிவாக பதிலளித்தார். இறுதியாக கேள்வி–பதில் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔