சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/நல்லதங்காள் திருக்கோயிலை இந்து சமய அறநிலைத்துறையே ஏற்று நடத்த வேண்டும்" – நாளைஙமறுநாள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் விருதுநகர் அறநிலையத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
செய்திகள்

நல்லதங்காள் திருக்கோயிலை இந்து சமய அறநிலைத்துறையே ஏற்று நடத்த வேண்டும்" – நாளைஙமறுநாள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் விருதுநகர் அறநிலையத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

The News Outlook
🕒 7 ஜூலை, 2026, 09:34 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நல்லதங்காள் திருக்கோயிலை இந்து சமய அறநிலைத்துறையே ஏற்று நடத்த  வேண்டும்" – நாளைஙமறுநாள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் விருதுநகர் அறநிலையத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

*நல்லதங்காள் திருக்கோயிலை இந்து சமய அறநிலைத்துறையே ஏற்று நடத்த வேண்டும்" – நாளைஙமறுநாள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் விருதுநகர் அறநிலையத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்* விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு அருகே அணைக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு அர்ச்சுனாபுரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த நல்லதங்காள் திருக்கோயிலைத் தனிநபர்கள் உரிமை கொண்டாடுவதைத் தடுத்து, அரசே முழுமையாக ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த அழகுமுனியாண்டி கூறியதாவது, நல்லதங்காள் கோயிலில் இருந்த பழமையான சிலை கடந்த 2025 ஜனவரி மாதம் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டது. இதையடுத்து, பழைய சிலையை அகற்றிவிட்டுப் புதிய சிலையை நிறுவி, வரும் வியாழக்கிழமை (09.07.2026) அன்று குடமுழுக்கு நடத்த அறநிலையத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.இந்த குடமுழுக்கு குறித்துப் பக்கத்து கிராம மக்களுக்கு முறையாகத் தகவல் தெரிவிக்கப்படவில்லையெனவும். ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மட்டும் சுயவிளம்பரத்திற்காகக் குடமுழுக்கு நடத்த முயல்வதாகவும், இதற்கு அறநிலையத்துறையின் செயல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் ஆகியோர் உடந்தையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். இக்கோயிலை எந்தவொரு தனிநபரோ அல்லது குறிப்பிட்ட தரப்போ உரிமை கொண்டாடக் கூடாது எனவும், அறநிலையத்துறையே கோவிலை முழுமையாக ஏற்று நடத்த வேண்டும். அப்போதுதான் சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு, அனைத்துப் பகுதி மக்களும் பாகுபாடின்றி சுவாமி தரிசனம் செய்ய முடியும் எனவும் தெரிவித்தார். பேட்டி: அழகு முனியாண்டி - அணைக்கரப்பட்டி

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...