சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/மஞ்சளாறு அணை பகுதியில் கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை – கூண்டு வைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை
செய்திகள்

மஞ்சளாறு அணை பகுதியில் கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை – கூண்டு வைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை

🕒 23 செப்., 2026, 09:35 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மஞ்சளாறு அணை பகுதியில் கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை – கூண்டு வைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை

AI Highlights

  • தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்படும் நிலையில், கால்நடைகள் தொடர்ந்து பலியாகி வருவதால் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டம் தொடர்ந்து இருப்பதாக கூறப்படும் நிலையில், கால்நடைகள் அடுத்தடுத்து பலியாகி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் பிரபாகரன் என்பவரது தோட்டத்திற்குள் நேற்று இரவு சிறுத்தை புகுந்ததாக கூறப்படுகிறது. அங்கு இருந்த இரண்டு கன்றுக்குட்டிகளை சிறுத்தை தாக்கி கொன்றதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதேபோல் கடந்த சில மாதங்களில் மஞ்சளாறு பகுதியில் பல்வேறு விவசாயிகளின் கால்நடைகள் சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. பிரித்விராஜன் என்பவருக்கு சொந்தமான 3 கன்றுகள் மற்றும் ஒரு பசுமாடு, செந்தில் என்பவரின் ஒரு கன்று, அண்ணாதுரை என்பவரின் 2 ஆடுகள் ஆகியவை அடுத்தடுத்து சிறுத்தையால் வேட்டையாடப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கால்நடை வளர்ப்பை முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள நிலையில், கால்நடைகள் தொடர்ந்து உயிரிழப்பதால் தங்களது குடும்ப வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், சிறுத்தையின் நடமாட்டம் குறித்து பலமுறை வனத்துறையிடம் தகவல் தெரிவித்தும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதனால், மஞ்சளாறு பகுதியில் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு அருகே நடமாடுவதாக கூறப்படும் சிறுத்தையை வனத்துறையினர் கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔