சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/அதிமுக கரை வேஷ்ட்டியுடன் மாணிக்கம் தாகூர்; விருதுநகரில் காங்கிரஸ் பேனரால் பெரும் பரபரப்பு!
செய்திகள்

அதிமுக கரை வேஷ்ட்டியுடன் மாணிக்கம் தாகூர்; விருதுநகரில் காங்கிரஸ் பேனரால் பெரும் பரபரப்பு!

The News Outlook
🕒 12 ஜூலை, 2026, 05:46 PM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
அதிமுக கரை வேஷ்ட்டியுடன் மாணிக்கம் தாகூர்; விருதுநகரில் காங்கிரஸ் பேனரால் பெரும் பரபரப்பு!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

அதிமுக கரை வேஷ்ட்டியுடன் மாணிக்கம் தாகூர்; விருதுநகரில் காங்கிரஸ் பேனரால் பெரும் பரபரப்பு!* காங்கிரஸ் மாநிலத்தலைவர் மாணிக்கம் தாகூர் அதிமுக கரைவேட்டியுடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்! விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பெயரில் விருது வழங்கும் விழா தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதற்காக வைக்கப்பட்ட வரவேற்பு பேனர் ஒன்று, தற்போதைய அரசியல் சூழலில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. விருதுநகர் நகர் காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெயில் முத்துமற்றும் மாநில ஓபிசி அணி மாநிலச் செயலாளர் திலக் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களுக்காக நகரின் முக்கியப் பகுதியில் பிரம்மாண்ட வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களின் படங்கள் இடம்பெற்றிருந்தன. அதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்பி மாணிக்கம் தாகூரின் புகைப்படமும் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் புகைப்படத்தில் எம்பி மாணிக்கம் தாகூர், அதிமுக கட்சியின் "கருப்பு, வெள்ளை, சிவப்பு" நிற கரைவேட்டியைக் கட்டியிருப்பது போன்ற படம் இடம்பெற்றிருந்தது. பேனர் வடிவமைப்பாளர்களின் கவனக்குறைவால் அல்லது கட்சி நிர்வாகிகளின் கவனக்குறைவால் இது நடந்திருக்கலாம். காங்கிரஸ் எம்பியின் படம் அதிமுக கரைவேட்டியுடன் இருக்கும் இந்த பேனரை, அங்கிருந்த பொதுமக்களும் பிற கட்சியினரும் வியப்புடன் பார்த்துச் சென்றனர். மேலும், இதனை யாரோ வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது தற்போது நெட்டிசன்களிடையே மிக வேகமாக வைரலாகி வருகிறது. "அதிமுகவில் மாணிக்கம் தாகூரா?" என்ற கேள்விகளுடனும், கிண்டலான கருத்துகளுடனும் இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இன்றைய தமிழக அரசியல் சூழலில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் அடுத்தடுத்து வேறு கட்சிகளுக்கு மாறி வரும் நிகழ்வுகள் பரவலாக நடந்து வருகின்றன. குறிப்பாக, சமீபகாலமாக அதிமுகவைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் தவெக நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு பரபரப்பான அரசியல் கட்சித் தாவல் சூழ்நிலைக்கு மத்தியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான எம்பி மாணிக்கம் தாகூரின் படம், அதிமுக கரைவேட்டியுடன் பேனரில் அச்சிடப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. காங்கிரஸ் மற்றும் அதிமுகவினர் இடையே இது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...