சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின் வத்திராயிருப்பு நல்லதங்காள் கோயிலில் கும்பாபிஷேகம்,பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது..!
செய்திகள்

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின் வத்திராயிருப்பு நல்லதங்காள் கோயிலில் கும்பாபிஷேகம்,பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது..!

The News Outlook
🕒 9 ஜூலை, 2026, 10:46 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின் வத்திராயிருப்பு நல்லதங்காள் கோயிலில்  கும்பாபிஷேகம்,பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது..!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின் வத்திராயிருப்பு நல்லதங்காள் கோயிலில் கும்பாபிஷேகம் ....பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது... விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தமிழகத்தின் பிரசித்தி பெற்ற நல்லதங்காள் கோயிலில் பல்வேறு பிரச்சனை, சர்ச்சைகளுக்கு மத்தியில் உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து பலத்தபோலீஸ் பாதுகாப்புடன் கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோயிலுக்கு தமிழக முழுவதிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள இக்கோயிலை அதை ஒட்டியுள்ள அர்ச்சுனாபுரம் கிராம மக்கள் நிர்வகித்து வந்தனர். நன்கொடை வசூல் மூலம் கோவிலை புனரமைத்தனர் புதிய மண்டபம் அமைத்தனர். இந்நிலையில் 2025 ஜனவரியில் நல்லதங்காள் சிலை சேதப்படுத்தப்பட்டது. இக்கோயிலில் புதிய சிலை பிரதிஷ்டை செய்வது தொடர்பாக அர்ச்சுனாபுரம் மற்றும் அதன் அருகே உள்ள அணைக்கரைப்பட்டி மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பாலாலயம் செய்து புதிய சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை முடிவு செய்தது. அதன்படி பணிகள் நடந்து சிலையை பிரதிஷ்டை செய்யவும் கும்பாபிஷேகம் நடத்தவும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இதனை எதிர்த்து அணைக்கரைப்பட்டி ஊர் மக்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் அறநிலையத்துறையினர் மற்றும் அர்ச்சுனாபுரம் கிராமத்தினர் கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதனை நிறுத்த கோரி அணைக்கரைப்பட்டி மக்கள் விருதுநகரில் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். நேற்று புதிய சிலை பிரதிஷ்டைக்காக கோவில் அருகே கொண்டு சென்ற போது போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் கும்பாபிஷேகம் பணிகள் தடைபட்டது. இதை எடுத்து ஏராளமான போலீசார் கோவிலை சுற்றிலும் அவ்விரு கிராமங்களை சுற்றிலும் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அனைவரும் ஒன்றிணைந்து கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு கும்பாபிஷேக பணிகள் துவங்கின. இரவு அவசர அவசரமாக நல்ல தங்காள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு மூன்று நாட்கள் நடத்த வேண்டிய யாகசாலை பூஜைகள் ஒரே நாளில் விடிய விடிய நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று காலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அணைக்கரைப்பட்டி, அர்ச்சுனாபுரம், வத்திராயிருப்பு உள்ளிட்ட அனைத்து பகுதி மக்களும் பங்கேற்புடன் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்தாலும் தொடர்ந்து கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...