பெருந்தலைவர் காமராஜரின் 51-வது நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு நாடார் சங்கம் கோவை மண்டலம் மற்றும் தமிழ்நாடு நாடார் சங்கம் சிறு, குறு வணிகர் அணி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
கோவை வடக்கில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவச் சிலைக்கு, தமிழ்நாடு நாடார் சங்க மாநிலத் தலைவர் ஜெ. முத்து ரமேஷ் நாடார் வழிகாட்டுதலின்படி, கோவை மண்டலத் தலைவர் நட்டாத்தி R. வெள்ளத்துரை நாடார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு நாடார் சங்க சிறு, குறு வணிகர் அணி மாநிலத் தலைவர் நவ்வலடி பா. கண்ணன் நாடார், மண்டலப் பொருளாளர் ஜெபஸ்டின் ராஜா நாடார், மண்டல அமைப்பாளர் கோவிந்தசாமி நாடார், மண்டல ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபுரம் செல்வகுமார் நாடார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

