சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/257 பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்: “வெற்றிப் பயணம்” திட்டம் தொடக்கம்
செய்திகள்

257 பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்: “வெற்றிப் பயணம்” திட்டம் தொடக்கம்

🕒 2 அக்., 2026, 09:17 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
257 பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்: “வெற்றிப் பயணம்” திட்டம் தொடக்கம்
✨

AI Highlights

  • •நெல்லை கோட்டத்தில் 257 பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்: “வெற்றிப் பயணம்” திட்டம் தொடக்கம்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருநெல்வேலி கோட்டத்தில் இயக்கப்படும் 257 புறநகர் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் வகையில், தமிழக அரசின் “மகளிர் வெற்றிப் பயணம்” திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் அரசு சாதாரண பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் வகையில் “மகளிர் விடியல் பயணம்” திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு இந்தத் திட்டத்தை புறநகர் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி “மகளிர் வெற்றிப் பயணம்” என அறிவித்துள்ளது. சென்னையில் தமிழக முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ், மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தனர். திருநெல்வேலி கோட்டத்தின் கீழ் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மண்டலங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 257 சாதாரண புறநகர் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்ய முடியும். திருநெல்வேலி மண்டலத்தில் 107 பேருந்துகளிலும், தூத்துக்குடி மண்டலத்தில் 85 பேருந்துகளிலும், கன்னியாகுமரி மண்டலத்தில் 65 பேருந்துகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர், தென்காசி, பாபநாசம், கோவில்பட்டி, நாகர்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் சாதாரண புறநகர் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். திட்டம் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து பேருந்துகளில் பயணம் செய்த பெண்கள் பணம் கொடுத்து பயணச்சீட்டு கேட்டபோது, அவர்களிடம் கட்டணம் வசூலிக்காமல் இலவச பயணத்திற்கான பயணச்சீட்டு வழங்கப்பட்டது. கிராமப்புறங்களில் இருந்து வெளியூர்களுக்கு சென்று வருவதற்கு குறைந்தபட்சம் 200 ரூபாய் வரை பேருந்து கட்டணம் செலவாகி வந்த நிலையில், தற்போது இலவச பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக மூதாட்டிகள் உள்ளிட்ட கிராமப்புற பெண்கள் தெரிவித்தனர். இந்தத் திட்டம் பெண்களின் பொருளாதாரச் சுமையை குறைத்து, அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும் என திட்டத்தை தொடங்கி வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் தெரிவித்தார். திட்டத்தை செயல்படுத்திய தமிழக வெற்றிக் கழக அரசுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔