சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/விருதுநகரில் மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் – பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கம்
செய்திகள்

விருதுநகரில் மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் – பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கம்

🕒 15 செப்., 2026, 02:38 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விருதுநகரில் மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் – பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கம்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கலசலிங்கம் தலைமை வகித்தார். ஓய்வூதியர் ஐக்கிய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சரவணன் மற்றும் ஐடிஐ படித்த வேலை வேண்டுவோர் ஐக்கிய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மின்வாரியத்தில் உள்ள களப்பணி பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கும் அறிவிப்பை உடனடியாக கைவிட வேண்டும், களப்பணி வேலைகளை தனியாருக்கு வழங்கும் சட்டமன்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், மத்திய அரசை பின்பற்றி மின்வாரியத்தில் FTE திட்டத்தை அமல்படுத்துவதையும், ஒப்பந்த முறையையும் உடனடியாக கைவிட வேண்டும், மின்சார வாரியத்தை தனியாருக்கு வழங்கும் தொழிலாளர் சட்டங்களை கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஐடிஐ படித்த இளைஞர்களுக்கு மின்வாரியத்தில் முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசின் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔