சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/நெல்லை டவுனில் இரட்டைக் கொலை
செய்திகள்

நெல்லை டவுனில் இரட்டைக் கொலை

🕒 29 செப்., 2026, 07:44 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
நெல்லை டவுனில் இரட்டைக் கொலை
✨

AI Highlights

  • •நெல்லை டவுன் மணிப்புரம் பகுதியில் கோவில் தகராறு காரணமாக பெட்ரோல் பங்க் உரிமையாளர் டால்டன் மற்றும் அவரது சகோதரர் நிக்கோலஸ் ராஜரத்தினம் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நெல்லை டவுன் மணிப்புரம் பகுதியில் கோவில் தொடர்பான தகராறில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் மற்றும் அவரது சகோதரர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த மற்றொரு நபர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நெல்லை டவுன் மணிப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் டால்டன் (70). இவர் நெல்லை கண்ணன் சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவரது சகோதரர் நிக்கோலஸ் ராஜரத்தினம் அவருக்கு உதவியாக இருந்து வந்துள்ளார்.

இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் இடையே அப்பகுதியில் உள்ள மாடசாமி, பேச்சியம்மன் கோவில்கள் தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த கோவில் கொடை விழாவின்போதும் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

வாக்குவாதம் முற்றி கத்திக்குத்து

இந்த நிலையில், இன்று காலை மாடசாமி பேச்சியம்மன் கோவில் பகுதியில் செந்தில்குமார் லாரியில் மண் கொட்டச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த டால்டன் மற்றும் நிக்கோலஸ் ராஜரத்தினம் ஆகியோர் கோவில் பிரச்சினை தொடர்பாக அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், செந்தில்குமார் கத்தியை எடுத்து இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த டால்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சகோதரர் நிக்கோலஸ் ராஜரத்தினம் படுகாயங்களுடன் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.

தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் நபருக்கும் காயம்

இந்த மோதலின்போது காயமடைந்த செந்தில்குமார், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீசார் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்திற்கான காரணம் மற்றும் மோதலின் முழு பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவில் தகராறு தொடர்பாக ஏற்பட்டதாக கூறப்படும் இந்த இரட்டைக் கொலை சம்பவம் நெல்லை டவுன் மணிப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔